ஏப்ரல் 14க்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


ஏப்ரல் 14க்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 8:31 PM IST (Updated: 23 Jun 2020 8:31 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கான கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் விரைவு, பயணிகள், மின்சார ரயில்களின் சேவை ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிவிப்பால், ஜூன் 30 வரை ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பி அளிக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் தற்போது ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் முதல்கட்டமாக 215 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 14க்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி 2020 ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ, வழக்கமாக இயக்கப்படும் அட்டவணை ரயில்களுக்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் ரத்து செய்யப்பட்டு, அதற்கான கட்டணத் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story