மராட்டியத்தை உலுக்கும் கொரோனா: மேலும் 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தை உலுக்கும் கொரோனா: மேலும் 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 Jun 2020 10:46 PM IST (Updated: 23 Jun 2020 10:46 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மேலும் 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

மராட்டியத்தில் நேற்று 3 ஆயிரத்து 721 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்த்து 35 ஆயிரத்து 769 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 3,214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்த்து 39 ஆயிரத்து 10 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 75 பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,531 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 1,925 குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69,631 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story