சீனாவை எதிர்கொள்ள இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்


சீனாவை எதிர்கொள்ள இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2020 12:01 AM GMT (Updated: 24 Jun 2020 12:01 AM GMT)

சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சார்ந்து இருக்கக்கூடாது என்றும், இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் எனவும் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை, 

இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினை இருநாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும். அமெரிக்க ஜனாபதி டொனால்டு டிரம்பை சார்ந்து இருக்க கூடாது என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சீனாவுடன் நாம் மோத விரும்பினால், அரசியலை குறைத்து தேச நலனில் அதிக அக்கறை செலுத்த ேவண்டும். அதற்கு நமக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உதவி தேவை இல்லை. நாம் தற்சார்பு நாடாக மாற வேண்டும்.

சீனாவுடன் வர்த்தகம் செய்வது வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களை அவமதிப்பது ஆகும். சீனாவின் பொருளாதாரத்தை சரிய வைக்க இந்தியா உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்துறையை விரிவுபடுத்த பெரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதற்கு முதலீடும், மின்சாரமும் தேவைப்படுகிறது. 

தொழில் துறையின் அடித்தளமே நாம் வலுப்படுத்த வேண்டிய வேளாண்மை துறையின் வளர்ச்சி தான். சீன முதலீடு குறித்து மத்திய அரசு கொள்கைகள் வகுக்க வேண்டும். சீன நிறுவனங்களுடன் ஆன 3 ஒப்பந்தங்களை மராட்டியம் நிறுத்தி வைத்து உள்ளது. சீன முதலீட்டை வைத்துள்ள உத்தரபிரதேசம், அரியானா, குஜராத் மாநிலங்கள் என்ன செய்ய போகிறார்கள்?.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story