எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் 3-வது சுற்று பேச்சுவார்த்தை
எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தை லடாக்கின் கிழக்கே எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல் பகுதியில் இந்திய எல்லைக்குள் நடந்தது.
இதில் லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கும் நடவடிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. மேலும் எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும் பேசப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலையிலும் தொடர்ந்தது. முந்தைய இரு சுற்று பேச்சுவார்த்தையிலும் பங்கேற்ற ஹரிந்தர் சிங் மற்றும் லியு லின் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு எல்லையில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story