சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை


சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை
x
தினத்தந்தி 2 July 2020 8:27 AM IST (Updated: 2 July 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார்.

புதுடெல்லி

திகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப்  (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார்

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு  சகோதரன் கொலை செய்து உள்ளார்.

சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவது:-

டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர்  இவரது சகோதரியை  2014 ஆம் ஆண்டில் மெஹ்தாப் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மெஹ்தாப்பை டெல்லி அம்பேத்கர் நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர் மீது 376டி, 328, 363, 342, 120பி மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தன்ர். மெஹ்தாப் கைது செய்யப்பட்டு, திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஜாகீரின் சகோதரி, சில நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். தங்கையின்  மரணத்திற்கு பலிவாங்க ஜாகீர் துடியாய் துடித்தார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் திகார் சிறையில் இருந்ததால் பழிவாங்கும் திட்டத்த நிறைவேற்ற முடியாமல் தவித்தார் ஜாகீர்.

எனவே, பழி வாங்குவதற்காக பல்வேறு  திட்டங்களை ஜாகீர் தீட்டினார். ஆனால் அவர் லோக்கல் சிறையில் மட்டுமே அடைக்கபட்டார். சமீபத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக திகார் சிறைக்கு சென்றார். பின்னர் ஜாகீரின் வேண்டுகோளின் பேரில் சிறை எண் 8 இலிருந்து, மெஹ்தாப்  இருக்கும் வார்டு எண் 4இல் உள்ள தரை தளத்திற்கு மாற்றப்பட்டார். 

இதற்காகவே  அவர் இருந்த வார்டில் உள்ள மற்ற கைதிகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருநதார்.இதனால் ஜாகீரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

தகுந்த சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்த ஜாகீர் கடந்த திங்கட்கிழமை தானே உருவாக்கிய கத்தி போன்ற உலோகத் துண்டால் மெஹ்தாப்பை  பல முறை குத்தி கொலைசெய்து உள்ளார் என கூறப்படுகிறது.


Next Story