டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 July 2020 3:49 PM GMT (Updated: 2 July 2020 3:49 PM GMT)

டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 92,175 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,864 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. 

இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 63,007 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,304 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story