முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
புதுடெல்லி
இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக் சென்றுள்ளார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார்.
சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, விமானப்படைத் தலைவரும், ராணுவத் தலைவரும் லே விமான நிலையத்தை அடைந்தனர். கால்வனில் நடந்த வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கிறது.
சீனாவுக்கு எதிரான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை பின்னடைவு செய்யும் விதமாக சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது.
பிரதமரின் திடீர் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சுந்தர் கூறினார்.
Related Tags :
Next Story