கேரளாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 July 2020 7:28 PM IST (Updated: 3 July 2020 7:28 PM IST)
t-max-icont-min-icon

கேரளத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,964 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 138 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 39 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 27 பேர் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

இன்று 201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை  2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story