ரூ.3 லட்சம் மதிப்புடைய தங்க முகக்கவசம் அணிந்த செல்வந்தர்!
மராட்டியத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்க முகக் கவசம் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மும்பை,
கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மக்கள் என்.95 மாஸ்க்குகள், துணியால் ஆன மாஸ்குகளை அணிவதை நாம் பரவலாக காண முடிகிறது. ஆனால், மராட்டியத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்க முகக் கவசம் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் அடுத்த பிம்பிரி பகுதியில் வசிக்கும் செல்வந்தர் சங்கர் குராடே, கை, கழுத்து, விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார். அதே பாணியில், முகக் கவசத்தையும் தங்கத்தில் அணிந்துள்ள அவர், சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும் கூறியுள்ளார். நுண்ணிய துளைகள் உள்ளதாகவும் கூறும் அவர், அந்த முகக் கவசத்தின் மதிப்பு 2 லட்சத்து 89 ஆயிரம் என்கிறார். அதாவது உலகின் மிக விலை உயர்ந்த முகக் கவசம் இது என்றே கூறப்படுகிறது.

Related Tags :
Next Story