உத்தரபிரதேசத்தில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைப்பு
உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர். இந்த போலீசார் அண்டை மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே (வயது 52) என்ற பிரபல ரவுடியை, கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அவனது கிராமத்துக்கு போலீசார் சென்றனர். அப்போது அவனது கூட்டாளிகள் போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடினர்.
இந்த பயங்கர சம்பவத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் உள்ளூர் கிராமவாசி ஆவார். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டனர். இதன் பயனாக அவனது 2 கூட்டாளிகள் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் விகாஸ் துபேயும், மற்ற கூட்டாளிகளும் இன்னும் சிக்கவில்லை.
எனவே அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அதன்படி 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன. இதைப்போல மாநிலத்துக்கு வெளியேயும் தேடப்பட்டு வருவதாக கான்பூர் போலீஸ் ஐஜி மோகித் அகர்வால் தெரிவித்தார். துபேவுடன் தொடர்புடைய 500-க்கும் மேற்பட்டோரின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் துபேயை கைது செய்யும் பணிகளில் மாநில அதிரடிப்படையும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. துபேயின் இருப்பிடம் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்து உள்ளனர். இவ்வாறு போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான துபேயை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. அவஸ்தி தெரிவித்தார்.
ஆனால் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்வார்கள் என துபே அஞ்சுவதாகவும், எனவே விரைவில் கோர்ட்டு ஒன்றில் அவர் சரணடைய இருப்பதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். எனவே போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இவ்வளவு அதிக போலீசாரை சுட்டுக்கொன்றதற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக டி.ஜி.பி. தெரிவித்தார்.
இதைப்போல கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்யப்போகும் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே துபேயிடம் தெரிவித்தது யார்? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இது தொடர்பாக சவுபேபூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், காவலர் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். அவர்களது செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ரவுடி விகாஸ் துபேயின் தாய் சரளா தேவியும் இது குறித்து வேதனை தெரிவித்து உள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில் தனது மகனையும் கொன்று விடுமாறு போலீசாருக்கு அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட போலீசாரின் உடல்கள் நேற்று மாலையில் அவரவர் சொந்த ஊர்களில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story