24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்று உறுதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6½ லட்சத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரசின் பிடியில் சிக்கி பலரும் தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 771 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 226 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் புதிதாக 442 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 13 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 695 ஆக உள்ளது. குஜராத்தில் 34,600 பேரும், உத்தரபிரதேசத்தில் 25,797 பேரும், மேற்குவங்காளத்தில் 20,488 பேரும், தெலுங்கானாவில் 20,462 பேரும், கர்நாடகாவில் 19,710 பேரும், ராஜஸ்தானில் 19,052 பேரும், ஆந்திராவில் 16,934 பேரும், அரியானாவில் 16,003 பேரும், மத்தியபிரதேசத்தில் 14,297 பேரும், 13-வது இடத்தில் உள்ள பீகாரில் 10,954 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 8,376 பேரின் உயிரை கொரோனா வைரஸ் குடித்துள்ளது. டெல்லியில் 2,923 பேரும், குஜராத்தில் 1,904 பேரும், தமிழகத்தில் 1,450 பேரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவாகவும் இருக்கிறது.

Related Tags :
Next Story