கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெறும் - மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நம்பிக்கை
கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெறும் என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை தயாரித்து உள்ளது. தற்போது இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதி இந்த மருந்தை வெளியிட இந்தியா திட்டமிட்டு உள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெறும் என மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், " தடுப்பு மருந்து சோதனை ஜூலை 7-ந் தேதி 13 அல்லது 14 ஆஸ்பத்திரிகளில் நடக்க உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்த சோதனைகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெறும் என நம்புகிறேன் " என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story