விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்ய தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்; கேரள மந்திரி பாராட்டு
விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்வது எப்படி என தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேரள நீர்வள துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தமிழர்களை பாராட்டி பேசியுள்ளார்.
பாலக்காடு,
கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசில் நீர்வள மந்திரியாக இருந்து வருபவர் கிருஷ்ணன் குட்டி. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட கருகமணி பகுதியில் புதிய நீர்ப்பாசன இயந்திரத்தின் செயல்பாட்டை துவக்கி வைத்து அவர் பேசினார்.
அவர் கூறும்பொழுது, விஞ்ஞானப்பூர்வமாக விவசாயம் செய்ய வேண்டும். விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்வது எப்படி என தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழர்களை பாராட்டும் வகையில் கூறினார். கேரள விவசாயிகள் வருமானத்தை ஈட்டும் வகையில் வேளாண்மையை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story