கொரோனா பாதிப்பு: இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக மாறியது
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது.
புதுடெல்லி
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நேற்று மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா முந்தி உள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்றிய நிலவரப்படி 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியா 6.9 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்தது. இந்தியா இப்போது முன்னதாக பிரேசில் மற்றும் அமெரிக்கா மட்டுமே உள்ளது. பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன, அமெரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன.
Related Tags :
Next Story