தேசிய செய்திகள்

பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது + "||" + Woman cop accused of extorting Rs 35 L from a rape accused

பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது

பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது
பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷா. இதில்பணியாற்றி வந்த 2 பெண்கள் கேனல் ஷா தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  

மகளிர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் சுவேதா ஜடேஜா அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யவில்லை மேலும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத சுவேதா, சாதாரண வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை சுவேதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, சுவேதாவை கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியாகியுள்ளனர்.
2. குஜராத், தமிழகத்தில் அதிக அளவு போலீஸ் காவல் மரணங்கள்; யாருக்கும் தண்டனை இல்லை
குஜராத், தமிழ்நாட்டில் அதிக அளவு போலீஸ் காவலில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன, ஆனால் இதில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
3. குஜராத்தில் மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக உயர்வு
குஜராத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,317 ஆக உயர்ந்துள்ளது.
4. குஜராத் முதல்வர் ஆலோசனையில் கலந்து கொண்ட எம்.எல்.ஏவுக்கு கொரோனா அறிகுறி
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா அறிகுறி;முதல்-அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது .
5. காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி கேசியர்
காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர்