மோடியின் தோல்விகள்: பிரதமரின் கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் கொரோனா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 நாட்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 69 ஆக உயர்ந்து உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளதையும், கொரோனாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என தெரிவித்த பிரதமரின் வீடியோவையும், பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story