நடிகை சுமலதா எம்.பி.க்கு கொரோனா உறுதி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியான நடிகை சுமலதா எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளை அந்த வைரஸ் தாக்க தொடங்கியுள்ளது. 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4-ந் தேதி எனக்கு லேசான தலைவலி மற்றும் தொண்டை வலி இருந்தது. நான் தொடர்ந்து எனது தொகுதியில் தொடர்ந்து மக்களை சந்தித்து வந்தேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நடமாடினேன். இதனால் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று (அதாவது நேற்று) வந்தது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் உங்களின் ஆசிர்வாதம் என் மீது இருக்கிறது. அதனால் நான் வேகமாக குணம் அடைகிறேன்.
மேலும் என்னை சந்தித்த நபர்களின் விவரங்களை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். என்னை சந்தித்தவர்களில் யாருக்காவது அறிகுறி இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சுமலதா தெரிவித்துள்ளார்.
இவர், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story