119-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: சியாமா பிரசாத் முகர்ஜிக்கு மோடி புகழாரம்


119-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: சியாமா பிரசாத் முகர்ஜிக்கு மோடி புகழாரம்
x
தினத்தந்தி 7 July 2020 1:58 AM IST (Updated: 7 July 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 119-வது பிறந்தநாள் விழா பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

புதுடெல்லி,

பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 119-வது பிறந்தநாள் விழா பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில் அவர் ‘சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாளில் வணங்குகிறேன். உணர்வுமிக்க நாட்டுப்பற்றாளரான அவர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உன்னதமாக பங்காற்றியவர். இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவரது கருத்துக்களும், கொள்கைகளும் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் அவர், ‘தேசஒற்றுமையை பாதுகாக்க இடைவிடாமல் போராடிய தேசபக்தர். தாய்நாட்டின் மீது அவர் கொண்ட அன்பு மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். சிறந்த தத்துவஞானி, கல்வியாளர்’ என்று கூறியுள்ளார்.

பாரதீய ஜன சங்கமே பின்னாளில் பாரதீய ஜனதா கட்சியாக உருவெடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story