கொரோனா பாதிப்பில் ரஷியாவை முந்தியது உலக நாடுகள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா
கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருந்த ரஷியாவை முந்தி, இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். நேற்று 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த ரஷியாவை முந்தி, இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் பிரேசிலும் நீடிக்கின்றன. இந்த தகவல் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வைரஸ் தொற்றால் மராட்டியத்தில் புதிதாக 151 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 63, தமிழகத்தில் 60, கர்நாடகாவில் 37, மேற்குவங்காளத்தில் 21, குஜராத் 18, ஆந்திராவில் 14, உத்தரபிரதேசத்தில் 12, மத்தியபிரதேசத்தில் 10, ராஜஸ்தானில் 9, தெலுங்கானாவில் 7, பீகாரில் 6, ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் தலா 5, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 2, கோவாவில் ஒருவரும் என ஒரே நாளில் 425 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக அதிகரித்து இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
மராட்டியம் பாதிப்பு-2,06,619 (உயிரிழப்பு 8,822), தமிழ்நாடு-1,14,978 (1,571), டெல்லி-99,444 (3,067), குஜராத்-36,037 (1,943), உத்தரபிரதேசம்-27,707 (785), தெலுங்கானா-23,902 (295), கர்நாடகா-23,474 (372), மேற்குவங்காளம்-22,126 (757), ராஜஸ்தான்-20,164 (456), ஆந்திரா-18,697 (232), அரியானா-17,005 (265), மத்தியபிரதேசம்-14,930 (608), பீகார்-11,876 (95), அசாம்-11,388 (14), ஒடிசா-9,070 (36), ஜம்மு காஷ்மீர்-8,429 (132), பஞ்சாப்-6,283 (164), கேரளா-5,429 (25), சத்தீஸ்கார்-3,207 (14), உத்தரகாண்ட்-3,124 (42), ஜார்கண்ட்-2,781 (19), கோவா-1,761 (7), திரிபுரா-1,568 (1), மணிப்பூர்-1,366, இமாசலபிரதேசம்-1,063 (11), லடாக்-1,005 (1), புதுச்சேரி-802 (12), நாகாலாந்து-590, சண்டிகார்-466 (6), தாதர்நகர் ஹவேலி-271, அருணாசலபிரதேசம்-269 (1), மிசோரம்-186, அந்தமான் நிகோபர் தீவு-125, சிக்கிம்-123, மேகாலயா-62 (1).
இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

Related Tags :
Next Story