இந்தோனேசியா, சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேசியா, சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 7 July 2020 1:39 AM GMT (Updated: 7 July 2020 1:39 AM GMT)

இந்தோனேசியா, சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகர்தா,

இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகள் குலுங்கியதாக  மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் இல்லை.

சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Next Story