அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் ஊழியர்களை அழைத்து வந்த இன்போசிஸ் !
அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் தனது ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனம் இந்தியா அழைத்து வந்தது.
பெங்களூரு,
விசா காலம் முடிந்த மற்றும் விசா காலம் காலாவதி ஆக சில நாட்களே இருந்த ஊழியர்களை, அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் இன்போசிஸ் நிறுவனம் பெங்களூருவுக்கு அழைத்து வந்தது. சான் பிரான்ஸிகோவில் இருந்து 76 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 206 பேருடன் வந்த கத்தார் ஏர்லைன்ஸ் தனி விமானம் நேற்று காலை பெங்களூரு வந்தடைந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி சஞ்சீவ் போடே இது குறித்து கூறுகையில், “ எங்களது நிறுவனத்தை சேர்ந்த சில ஊழியர்கள் விசா காலக்கெடு முடிந்த நிலையில் அமெரிக்காவில் தவித்தனர். சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதலால், அவர்களை சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூர் அழைத்து வந்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த செயலுக்கு அதன் ஊழியர்கள் பாராட்டு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தனி விமானம் மூலம் ஊழியர்களை இன்போசிஸ் அழைத்துச்செல்வது இது முதல் முறையல்ல. புவனேஷ்வரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அங்கு பணியாற்றிய தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரை தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு இன்போசிஸ் நிறுவனம் அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story