ஒடிசாவில் 2 நாட்களில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை


ஒடிசாவில் 2 நாட்களில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 7 July 2020 2:28 PM IST (Updated: 7 July 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் கடந்த 2 நாட்களில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள், சத்தீஷ்கார் மற்றும் ஜார்க்கண்டில் இருந்து ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டுகள் தடுப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இதில், கடந்த 5ந்தேதி மற்றும் 6ந்தேதி ஆகிய நாட்களில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  இவற்றில் கடந்த 5ந்தேதி, 2 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Next Story