சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
தினத்தந்தி 7 July 2020 8:40 PM IST (Updated: 7 July 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நடப்பாண்டு பாடத்திட்டங்கள் பொதுவாக ஜூன் மாதம் துவங்கும் நிலையில், கொரோனா காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு கல்வி திட்டத்தில் பாடங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை  30 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 1500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனையின் பேரில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story