மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ., தாயாருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. முக்தா திலக், தனக்கும் மற்றும் தனது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் இருவருக்கும் எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை. எங்களுடைய மருத்துவர்கள், இருவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தினர். அதனால் நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம்.
என்னுடைய குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களுக்கு நடந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்புகள் இல்லை என தெரிய வந்துள்ளது. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story