தேசிய செய்திகள்

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது - பினராயி விஜயன் + "||" + Kerala gold smuggling case: Woman in question has no connection with CMO, says Pinarayi Vijayan

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது - பினராயி விஜயன்

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது -  பினராயி விஜயன்
தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.  தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.


இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.  அவர் தப்பியோடி விட்டார்.  அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.

முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களும் மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. மாநில அரசுகள் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  தங்கக் கடத்தல் வழக்கில் கேள்விக்குரிய பெண்ணுக்கு சி.எம்.அலுவலகம் மற்றும் ஐ.டி துறையுடன் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்
கேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் அடுத்த 2 வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
4. மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்
மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
5. கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்
கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...