கோவாவில் கொரோனாவுக்கு பா.ஜ.க. முன்னாள் தலைவர் பலி


கோவாவில் கொரோனாவுக்கு பா.ஜ.க. முன்னாள் தலைவர் பலி
x
தினத்தந்தி 8 July 2020 1:11 AM IST (Updated: 8 July 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

கோவா மாநில பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் டாக்டர் சுரேஷ் அமோங்கர் (வயது 68). கொரோனாவுக்கு பலி ஆனார்.

பனாஜி,

கோவா மாநில பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் டாக்டர் சுரேஷ் அமோங்கர் (வயது 68). இவர் மாநில முன்னாள் மந்திரியும் ஆவார்.

கடந்த வாரம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

கோவாவில் கொரோனாவுக்கு பலியான 8-வது நபர், டாக்டர் சுரேஷ் அமோங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு அந்த மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த், மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக், மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் திகாம்பர் காமத் ஆகியோர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

Next Story