உள்நாட்டில் பணியில் இருக்கும் இந்தோ-திபெத் படையினர் எல்லைக்கு நகர உத்தரவு லடாக் மோதலை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை


உள்நாட்டில் பணியில் இருக்கும் இந்தோ-திபெத் படையினர் எல்லைக்கு நகர உத்தரவு லடாக் மோதலை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2020 1:45 AM IST (Updated: 8 July 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

லடாக்கில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு தற்போது இரு தரப்பும் படைகள் விலக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது.

இந்த மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையேயான 3,488 கி.மீ. தொலைவிலும் தீவிர கண்காணிப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தோ-திபெத் படையினரை அங்கு நிறுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் திறன் பெற்ற இந்த படையினரை அங்கு செல்ல மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி உள்நாடுகளில் பணியில் இருந்த 60 கம்பெனி படையினர் எல்லை நோக்கி சென்று வருகின்றனர்.

இதில் 40 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே எல்லையை அடைந்துள்ள நிலையில், மீதமுள்ள வீரர்களும் விரைவில் எல்லைக்கு செல்ல உள்ளனர். இதைப்போல இந்தோ-திபெத் படையில் கூடுதலாக 9 படைப்பிரிவுகளை உருவாக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தோ-திபெத் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story