ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு


ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 8 July 2020 4:42 AM IST (Updated: 8 July 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 02:12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எல்லையோர பகுதியான ரஜோரியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால்  பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல்கள் இல்லை.

நேற்று இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜாவா மாகாணத்தின் பட்டாங் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story