சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்
சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட அழகு நிலைய உரிமையாளர்.
புதுடெல்லி
டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இங்கு வேலை செய்த சப்னா என்பவர், ஜனவரி முதல் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் வேலை செய்ததற்கான ஊதியத்தை கேட்டுள்ளார். ஆனால், நிகிதா மறுக்கவே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகிதா தனது வளர்ப்பு நாயை விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதனால் சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 2 பற்களும் உடைந்துள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா, ஜுன் 11-ல் டெல்லி போலீசில் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரிமீ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நிகிதா தலைமறைவாகிவிட்டார். சில தன்னார்வ அமைப்புகள் தலையிட்டதால் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, 20 நாட்கள் கழித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நிகிதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story