ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
புதுடெல்லி,
ராஜீவ்காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய மூன்று அறக்கட்டளைகள் நிதி நடவடிக்கையில் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அதனை விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடை விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது.
அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்து விசாரணையைக் கண்காணிக்க உள்ளார் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story