தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் + "||" + West Bengal teacher Chiranjit Dhibar gets call for human clinical trial of COVID-19 vaccine in Odisha

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்

இந்தியாவில் கொரோனா வைரஸ்  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்
மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபரானார்.
மும்பை

ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் நேற்று தொடங்கியது.

மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர்  சிரஞ்சித் திபார் கொரோனா வைரஸ்  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபரானார். வரும் நாட்களில், வைரசுக்கு எதிரான ஆண்டி பாடிக்களை உருவாக்கும் ஆண்டிஜனைப் பெற,  திபார் ஒடிசாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபார் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராவார். கொரோனா தடுப்பு மருந்துக்கான மனித சோதனையின் பல்வேறு கட்டங்களில் கலந்துகொள்ள அவர் தானாக முன்வந்துள்ளார்.  தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியை உறுதிப்படுத்திய திபார், தான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின்மருத்துவ பரிசோ தனைக்காக தனது உடலை நாட்டிற்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் எழுதியுள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே இந்த மருத்துவ பரிசோதனைக்கு திபார் விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று, திபார் ஐ.சி.எம்.ஆரின் பாட்னா மையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது.தொடர்புடைய செய்திகள்

1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...