பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரகாஷ் ஜவடேகர் தகவல்
பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போத் அவர் பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு 1.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வாடகை வீடுகள் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாச்ஜ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும் திட்டமும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாச்ஜ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story