குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,995 ஆக உயர்வு
குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,995 ஆக உயர்ந்துள்ளது.
காந்திநகர்,
இந்தியாவில் இன்று வரை 7.42 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 20,642 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 482 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. இந்நிலையில், குஜராத் சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,995 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று 783 பேருக்கு பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 27,313 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story