கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு - முதல்-மந்திரி எடியூரப்பா தீவிர ஆலோசனை
ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதல்-மந்திரி எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, மாநிலத்தில் தற்போது தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அது தவிர ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை செயல்படுத்துகிறோம். ஆனாலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கிறது. அதனால் அடுத்த ஒரு மாதத்திற்கு சனிக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா?. இதுகுறித்து நீங்கள் (அஸ்வத் நாராயண், சுதாகர்) கருத்துகளை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து வாரத்திற்கு 2 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story