காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ்; பீதி அடைய தேவையில்லை- இந்திய நிபுணர்


காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ்; பீதி அடைய தேவையில்லை- இந்திய நிபுணர்
x
தினத்தந்தி 9 July 2020 10:54 AM IST (Updated: 9 July 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ் பீதி அடைய தேவையில்லை என்று இந்திய நிபுணர் கூறி உள்ளார்.

புதுடெல்லி

காற்றில் சிறிய துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான ஆதாரத்துடன் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். மேலும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைத் திருத்துமாறு கேட்டு கொண்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான வாய்ப்புகளை உலக சுகாதார அமைப்பு  ஒப்புக் கொண்டு உள்ளது, 

இதை தொடர்ந்து மக்களிடையே  பீதி நிலவுகிறது. இருப்பினும், இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மைய (சி.சி.எம்.பி) நிபுணர்கள் இதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்று கூறி உள்ளனர்.

இது குறித்து சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது:-

சமீபத்திய கண்டுபிடிப்பு நோய்க்கிருமி காற்றில் ‘குறைந்தபட்சம் தற்காலிகமாக’ இருக்கக்கூடும் என்பது அது எல்லா இடங்களிலும் பறக்கிறது என்றும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அர்த்தமல்ல.

வைரஸ் குறைந்தபட்சம் தற்காலிகமாக காற்றில் பறக்கக்கூடியது, அதாவது ஐந்து மைக்ரானுக்கும் குறைவான சிறிய அளவிலான நீர்த்துளிகளில் பயணிக்க முடியும், அதாவது பெரியதை விட நீண்ட நேரம் காற்றில் தொங்கும் என்று அர்த்தம்.

மக்கள் தொடர்ந்து அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.  சமூக விலகலை எல்லா நிலையிலும் பராமரிக்க வேண்டும், மக்கள் அதிகம் இருக்கும் குறிப்பாக ஏசி அறைகள் போன்ற காற்றோட்டம் இல்லாத அறைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என கூறினார். 

Next Story