சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது ஏன்? - அமைச்சர் பொக்ரியால் விளக்கம்


சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது ஏன்? - அமைச்சர் பொக்ரியால் விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2020 1:26 PM IST (Updated: 9 July 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது ஏன்? என்று மத்திய அமைச்சர் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி அன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.  புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை.  கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால், “ மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.  அரசியல் செய்வதை விட்டுவிட்டு, அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம். கல்வியாளர்களிடம் பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story