உலக ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் 10 லட்சத்தில் 538 கொரோனா பாதிப்புகளே உள்ளன; மத்திய அரசு
உலக நாடுகளுடனான ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் 10 லட்சத்தில் 538 என குறைவான பாதிப்புகளே உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 55 ஆயிரத்து 402 பேர் ஆளாகி உள்ளனர். 5.5 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 31.58 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 1.34 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு 7.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 21,129 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும், மக்கள் தொகை அடர்த்தியுடன் ஒப்பிடும்பொழுது, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், இந்தியா குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளின், உலக ஒப்பீட்டு அளவில், இந்தியா குறைந்த பாதிப்பு எண்ணிக்கைகளையே கொண்டுள்ளன.
இதன்படி, 10 லட்சம் பேரில் 538 பேர் பாதிப்படைந்து உள்ளனர். பலியானோர் எண்ணிக்கையும் 10 லட்சத்தில் 15 பேர் என்ற அளவில் உள்ளது.
உலக நாடுகளில் இந்த சராசரி எண்ணிக்கையானது முறையே 1,453 மற்றும் 69 என்ற அளவில் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story