சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி - ராஜ்நாத் சிங்


சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 9 July 2020 11:56 PM IST (Updated: 9 July 2020 11:56 PM IST)
t-max-icont-min-icon

சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சாலைப்போக்குவரத்தை மேம்படுத்த எல்லை சாலை கட்டமைப்பு நிறுவனம் மூலம், காஷ்மீர் உத்தரகண்ட், லடாக், பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் காஷ்மீரில் உள்ள அக்னூர் துறையில் நான்கு பாலங்களும், ஜம்மு - ராஜ்புரா பகுதியில் இரண்டு பாலங்களும் எல்லை சாலை கட்டமைப்பு நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய 6 பாலங்களையும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கூறியதாவது:-

இந்தியாவில் எல்லைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் ராணுவ வீரர்களின் தேவைகளை மனதில் கொண்டு, பல மேம்பாட்டு பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.  ஜம்மு பிராந்தியத்தில் தற்போது சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் கட்டுமானத்தில் உள்ளது.

சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி எனவும் தொலைதூர பிராந்தியங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story