கொரோனா பரவலால் வைரத்தொழில் முடங்கியது


கொரோனா பரவலால் வைரத்தொழில் முடங்கியது
x
தினத்தந்தி 10 July 2020 12:54 AM IST (Updated: 10 July 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் வைரத்தொழில் முடங்கி உள்ளது.

சூரத், 

குஜராத்தின் சூரத் நகரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரத்தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வைரம் வெட்டுதல், பாலீஷ் செய்தல் போன்ற பணிகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்து ஜூன் முதல் வாரம் வரை இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் 2-வது வாரத்தில் இருந்து மீண்டும் வைர தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின.

இதற்கிடையே 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், வருகிற 13-ந்தேதி வரை வைர தொழிற்சாலைகளை மூடுமாறு சூரத் நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தினமும் 6 ஆயிரம் ஊழியர்கள் பஸ்கள் மூலமும், கார், லாரிகள் மூலம் 4 ஆயிரம் ஊழியர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இவர்களில் 70 சதவீத தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story