கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது - ராகுல் காந்தி எம்.பி


கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது - ராகுல் காந்தி எம்.பி
x
தினத்தந்தி 10 July 2020 1:41 PM IST (Updated: 10 July 2020 1:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- “ கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது முற்றிலும் நியாயமற்றது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் குரலுக்கு  யுஜிசி கண்டிப்பாக செவிமடுக்க வேண்டும். தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு முந்தைய தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களை மேல் வகுப்புக்கு அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story