பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்


பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
x
தினத்தந்தி 10 July 2020 2:31 PM IST (Updated: 10 July 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணமடைந்துள்ளார்.

ரஜோரி:

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஜோரி மாவட்டம் நவ்சரா செக்டாரில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த இந்திய வீரர் சம்பூர் குருங், பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஹவில்தார் சம்பூர் குருங் ஒரு துணிச்சலான, ராணுவ வீரர அவரது உயர்ந்த தியாகம் மற்றும் கடமை மீதான பக்திக்கு, தேசம் எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கும், என்று ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் நீடிப்பதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக அந்நாட்டு படையினர் அடிக்கடி எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்கள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story