ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; கர்நாடக முதல் மந்திரி தனிமைப்படுத்தி கொண்டார்
ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வின் முதல் மந்திரி எடியூரப்பா வெளியிட்டு உள்ள செய்தியில், முதல் மந்திரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவேன் என கூறினார்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளால் முதல் மந்திரிகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதேபோன்று பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் உறவினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
Related Tags :
Next Story