தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 74 போலீசார் பலி + "||" + 74 policemen killed in corona attack in Maharashtra

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 74 போலீசார் பலி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 74 போலீசார் பலி
மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 74 பேர் பலியாகி உள்ளனர்.
புனே,

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.

மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 222 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை 4,714 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.  இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,935 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடு திரும்பினர். மீட்புவிகிதம் 65.44 சதவீதமாக உயர்ந்தது. இறப்புவிகிதம் 2.13 சதவீதமாக குறைந்தது.
2. வரலாறு காணாத கடும் விலை உயர்வு ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது கிராம் ரூ.5,065-க்கு விற்பனை
தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 65-க்கு விற்பனை ஆகிறது.
3. தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு பவுன் ரூ.39,032க்கு விற்பனை
தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 32க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
4. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்து உள்ளது.
5. தங்கம் விலை அதிரடியாக பவுன் ஒன்றுக்கு ரூ.592 உயர்வு
தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு இன்று ஒரே நாளில் அதிரடியாக ரூ.592 உயர்வடைந்து உள்ளது.