ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்


ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்
x
தினத்தந்தி 10 July 2020 5:46 PM IST (Updated: 10 July 2020 5:46 PM IST)
t-max-icont-min-icon

இரண்டு இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்

சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார்.இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை 
ஆய்வு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டனர்.

அப்போது 35 வயது பெண் ஒருவருடன் அந்த பெண்  ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக அவர்களை காரில் அழைத்து சென்ற ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் ஐதராபாத் முகவரியை கொடுத்தார்.
பின்னர் போலீசார் அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது, மேலும் 35 வயது பெண் ஆண் வேடத்தில் இருந்ததும் தெரிந்தது.

இருவரும் சொந்த ஊருக்கு வர முடியாது என கூறியதோடு தாங்கள் கணவன், மனைவியாக வாழ்வதை பிரிக்க முடியாது என கூறிவிட்டனர்.இதனால் ஏமாற்றத்துடன் சத்தீஸ்கார் போலீசார் சொந்த ஊர் வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 35 வயது பெண்ணும், 20 வயது பெண்ணும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நட்பானார்கள்.இதன்பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஐதராபாத் 
வந்தனர்.அங்கு திருமணம் செய்து கொண்ட பின்னர் 35 வயது பெண் ஆண் போல தலைமுடியை மாற்றி கொண்டு ஒட்டு மீசையை ஒட்டி கொண்டு ஆண் போலவே வேடமிட்டுள்ளார்.

பின்னர் 20 வயது பெண் தனது மனைவி என கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறியுள்ளனர்.அவர்களின் குடும்பத்தார் எவ்வளவோ கூறியும் இருவரும் அவர்களுடன் செல்ல 
மறுத்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

Next Story