சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2020 7:01 PM IST (Updated: 11 July 2020 7:01 PM IST)
t-max-icont-min-icon

சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி எம்.பிக்களுடன்  சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.
சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற மக்களவை எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

சீனாவுடனான மோதலை அரசியலாக்கக்கூடாது எனக்கூறி  பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொய் சொல்லி நாட்டை ஏமாற்றுவருகிறார்.  நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.  நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எல்லைகளை பலவீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்ற காங்கிரசின் நிலையில் உறுதியாக உள்ளோம்.

நமது நட்பு நாடுகளும் நமக்கு எதிராக திரும்பி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசிடம் உதவி கோருகின்றன. ஆனால், மத்திய அரசு அதனை கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  சோனியாகாந்தி இடைக்கால தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தியா அல்லது பிரியங்கா காந்தியா என்பது குறித்து பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story