குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 11 July 2020 9:52 PM IST (Updated: 11 July 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேலை நியமித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் உடனடியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ல் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர்.

இதில் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார்.

தனி நபராக செயலாற்றி வந்த இவர்  மார்ச் 12, 2019-இல் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எனினும் 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story