அருணாசலபிரதேசத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


அருணாசலபிரதேசத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 July 2020 1:14 AM IST (Updated: 12 July 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

அருணாசலபிரதேசத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இடாநகர், 

அருணாசல பிரதேச மாநிலத்தில் நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் முவிவா) என்ற என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் நாகா மக்களுக்காக தனி நாடு வேண்டும் எனக்கோரி, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் அங்குள்ள திரப் மாவட்டத்தின் கோன்சா பகுதியில் அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அசாம் ரைபிள் படையினர் மற்றும் அருணாசலபிரதேச போலீசார் அடங்கிய குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பகுதியை போலீசார் நெருங்கியபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர். இதற்கு போலீஸ் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். மேலும் அங்கிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story