கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு:வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடின


கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு:வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 12 July 2020 1:51 PM IST (Updated: 12 July 2020 1:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினமும் ஆயிரத்தை தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது. நகரில் எந்தவித வெளித்தொடர்பும் இல்லாதவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் நகரில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இன்று கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,  பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Next Story