பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்


பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்
x
தினத்தந்தி 12 July 2020 2:04 PM IST (Updated: 12 July 2020 2:04 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாந்ரா பகுதியில் உள்ள நடிகை ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்தனர்.

அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகை ரேகா மறைந்த நடிகர் ஜெமினிகணேசனின் மகள் ஆவார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட   பாதுகாவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story