ராணுவவீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
ராணுவவீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ராணுவ வீரர்கள் ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவ கொள்கை விதிகள் வகுக்கப்பட்டது. இதனை எதிர்த்து காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி பி.கே.சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர், ‘ராணுவ வீரர்கள் குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் கஷ்டமான வானிலை, கடினமான நிலப்பரப்பில் பணியாற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் குடும்ப இடைவெளியை ஈடுசெய்கிறது. எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று ராணுவ புலனாய்வுத்துறை பொது இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story